முதலில் பேட்டிங் செய்தால் 350 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும்: சுப்மன் கில்!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 560 ரன்களுக்கு மேல் குவித்து டிக்ளேர் செய்தது.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றபின், இந்திய அணி மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தொடரை இழந்தது. ஆஸ்திரேலியாவில் தொடரை இழந்தது.

இந்த நிலையில் வெற்றிக்குப் பின் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:-

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது, ​​நாம் எங்கு விளையாடினாலும் அல்லது ஆடுகளத்தின் தன்மை எப்படி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் 350 ரன்களைப் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும்.


எந்த இடத்திலும் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தக்கூடிய திறன் எங்கள் பந்துவீச்சு குழுவிடம் உள்ளது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

அணியில் மாற்றங்கள் நிகழும்போதெல்லாம், பேட்டிங் குழு அதிக அழுத்தத்திற்கு உள்ளாவதாக நாங்கள் உணர்கிறோம்.

அதே வேளையில், அனுபவத்தைப் பெறவும் நாங்கள் முயற்சிக்கிறோம். இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *