‘ஹபீபி’ படத்தில் எனக்கு வசனமே இல்லை-மாளவிகா மனோஜ்!

சென்னை:
‘ஜோ’ திரைப்பட புகழ் மாளவிகா மனோஜ் மற்றும் மூத்த இயக்குனர் கஸ்தூரி ராஜா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஹபீபி’. மீரா கதிரவன் இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் ஜூன் 12 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் தென் தமிழகத்தில் உள்ள ஒரு முஸ்லிம் வாழ்வியலையும் காதலையும் மையமாகக் கொண்டது.

கடையநல்லூர் பின்னணியில் ‘நிலோபர் நிஷா’ என்ற முஸ்லிம் பெண்ணாக நடித்துள்ள மாளவிகா மனோஜிடம், அங்கு பேசப்படும் வட்டார வழக்கு தமிழ் குறித்துக் கேட்டபோது, “இந்தப் படம் முழுவதும் எனக்கு வசனங்களே இல்லை” என்று கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து, இயக்குனர் மீரா கதிரவன் கூறுகையில், “படம் முழுக்க மாளவிகாவிற்கு ஒரே ஒரு வசனம் மட்டும்தான் இருக்கிறது.

படம் முழுவதும் தனது கண்கள் மற்றும் உடல் மொழியாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.

திரையரங்கில், அவர் அந்த ஒரு சிறந்த வசனத்தைப் பேசும்போது பார்வையாளர்களுக்கு அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதுவரை அவர் பேசவில்லை என்ற உணர்வே வராத அளவிற்கு அற்புதமாக நடித்துள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *