மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!!

சென்னை
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிகளை அடங்கிய காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கிவருகிறார்.

முன்னதாக எம்ஜிஆர் மாளிகைக்கு வருகை தரும் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் மாளிகை வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி, பொருளாளர், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் பொன்னையன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளும் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான சோமசுந்தரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள்,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழகச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், அதிமுக அணி பிரிவு நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும், அதிமுகவின் அடுத்த கட்ட ஆக்கபூர்வமான வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *