தமிழகத்​தில் இடைத்​தேர்​தல் மற்​றும் உள்​ளாட்​சித் தேர்​தலை எதிர்​கொள்ள அதி​முக தயா​ராக உள்ளது – முன்​னாள் அமைச்​சர் ஓ.எஸ்​.மணி​யன்!!

சென்னை:
தமிழகத்​தில் இடைத்​தேர்​தல் மற்​றும் உள்​ளாட்​சித் தேர்​தலை எதிர்​கொள்ள அதி​முக தயா​ராக உள்ளதாக முன்​னாள் அமைச்​சர் ஓ.எஸ்​.மணி​யன் தெரி​வித்​துள்​ளார்.

அதி​முக நிர்​வாகி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், சென்னையில் நேற்று நடை​பெற்​றது.

பின்னர் ஓ.எஸ்​.மணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: இந்தக் கூட்டத்தில் தேர்​தல் தோல்விக்​கான காரணங்​களை வெளிப்​படை​யாகத் தெரிவிக்​கலாம் என பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

அதன் அடிப்​படை​யில், கூட்​டத்​தில் பங்​கேற்ற பெரும்​பாலான நிர்​வாகி​கள் கடந்​த​காலமற்​றும் நிகழ்​கால அரசியல் சூழல்கள் குறித்த தங்​களு​டைய கருத்​துகள், அனுபவங்​கள் மற்​றும் விமர்​சனங்​களை வெளிப்​படை​யாக முன்வைத்​தனர்.

நிர்​வாகி​களின் கருத்​துகளை முழு​மை​யாக உள்​வாங்​கிக் கொண்ட பொதுச்​செய​லா​ளர், வருங்​காலத்​தில் இது​போன்ற கருத்து கேட்​புக் கூட்​டங்​கள் தொடர்ச்​சி​யாக நடத்​தப்​படும்.

நிர்​வாகி​களின் ஆலோ​சனை​களைக் கேட்போம் என உறு​தி​யளித்​தார். இடைத்​தேர்​தல் மற்​றும் உள்​ளாட்​சித் தேர்​தலைச் சந்​திக்க அதி​முக எப்​போதும் தயா​ராக உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *