சூர்யவன்ஷி 11 பந்​துகளி​லேயே அரை சதம் !! இலங்கை ஏ அணியை வென்​று இந்​தியா சாம்பியன்….

தம்​புல்லா:
3 நாடு​கள் இடையி​லான கிரிக்​கெட் தொடரில் இந்திய ஏ அணி 66 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்​றது.

இலங்கையின் தம்​புல்​லா​வில் நேற்று நடை​பெற்ற இறுதிப் ​போட்டியில் முதலில் விளை​யாடிய இந்​திய அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 377 ரன்​கள் குவித்​தது.

வைபவ் சூர்​ய​வன்ஷி 29 பந்​துகளில் 94 ரன்​கள் குவித்து அவுட்​டா​னார். மேலும் அவர் 11 பந்​துகளி​லேயே அரை சதம் விளாசி புதிய சாதனையைப் படைத்தார்.

லிஸ்ட் ஏ வகை கிரிக்​கெட் போட்​டிகளில் இதற்கு முன்பு இலங்கை வீரர் கவுசல்யா வீரரத்னே 12 பந்​துகளில் அரை சதம் விளாசியிருந்தார்.

இந்த சாதனையை தற்​போது சூர்யவன்ஷி 11 பந்​துகளி​லேயே அரை சதம் விளாசி முறியடித்​தார்.

பின்​னர் விளை​யாடிய இலங்கை ஏ அணி, 47.1 ஓவர்​களில் 311 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து 66 ரன்​கள் வித்​தி​யாசத்​தில்​ தோல்​வி கண்​டது.

இதையடுத்து இந்திய ஏ அணி கோப்பையைக் கைப்பற்றியது. ஆட்​ட​நாயக​னாக சூர்​ய​வன்​ஷி தேர்வானார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *