தம்புல்லா:
3 நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது.
வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அவுட்டானார். மேலும் அவர் 11 பந்துகளிலேயே அரை சதம் விளாசி புதிய சாதனையைப் படைத்தார்.
லிஸ்ட் ஏ வகை கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு இலங்கை வீரர் கவுசல்யா வீரரத்னே 12 பந்துகளில் அரை சதம் விளாசியிருந்தார்.
இந்த சாதனையை தற்போது சூர்யவன்ஷி 11 பந்துகளிலேயே அரை சதம் விளாசி முறியடித்தார்.
பின்னர் விளையாடிய இலங்கை ஏ அணி, 47.1 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
இதையடுத்து இந்திய ஏ அணி கோப்பையைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக சூர்யவன்ஷி தேர்வானார்.