சென்னை:
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, தற்போது இயக்குனர் ராஜ் நிடிமோருவை கடந்த ஆண்டு டிசம்பர் 2025-ல் திருமணம் செய்து கொண்டு தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் இருக்கிறார்.
சமீபத்தில் இவரது ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில், சமந்தா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்தச் சூழலில், கடந்த 2018-ஆம் ஆண்டு நாக சைதன்யாவுடன் திருமண வாழ்க்கையில் இருந்தபோது குழந்தை பிறப்பு குறித்து சமந்தா பேசிய பழைய நேர்காணல் ஒன்று தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2017-ல் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு, 2018-ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் சமந்தாவிடம் குடும்ப கட்டுப்பாடு மற்றும் குழந்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த சமந்தா:
“நாங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான காலக்கெடுவையும், தேதியையும் கூட குறித்துவிட்டோம்!
என்னவோ நாங்கள் குறித்த தேதிப்படியே எல்லாம் நடப்பது போலத்தான் (சிரிக்கிறார்). ஆனால் சைதன்யா, நாம் குறித்த அதே தேதியில் தான் குழந்தை பிறக்கும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,”எனக்கு குழந்தை பிறந்தால், அதுவே என் உலகமாக மாறிவிடும். குழந்தை பிறந்த ஆரம்ப வருடங்களில் நான் சினிமாவில் நடிக்காமல், முழு நேரத்தையும் என் குழந்தையுடனேயே செலவிடுவேன்.
என்னுடைய குழந்தைப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இல்லை. அதனால், எனக்கு கிடைக்காத பல நல்ல விஷயங்களை என் குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கி றேன்” என்றும் உருக்கமாகப் பேசியிருந்தார்.
இதுமட்டுமின்றி, 2021-ல் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் நீலிமா குணா ஒரு பேட்டியில், “சமந்தா சாகுந்தலம் கதையைக் கேட்டதும், 2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
அதன் பிறகு தான் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டு ள்ளதாகவும், அதுவே தனது முதல் முன்னுரிமை என்றும் கூறினார்” எனத் தெரிவித்து இருந்தார்.
திட்டமிட்டபடி எதுவும் அமையாமல், சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியினர் 2021-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தற்போது நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துள்ளார்.
சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
தற்போது சமந்தா கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் செய்திக ளுக்கு இடையே, இந்த பழைய நினைவுகள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.