பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ஏற்பாடு செய்த “ரோமன் ஹோலி” கொண்டாட்டம் நிகழ்ச்சி மும்பை ‘ஆன்டிலியா’ஜியோ வேர்ல்ட் பிளாசாவில்நேற்று மாலை நடந்தது.
இதில் பாலிவுட் நட்சத்திரங்கள்பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
வண்ண ரத்தினக் கற்களின் மாஸ்டர் என்று அழைக்கப்படும் அற்புதமான ரோமானிய பெரிய நகைக் கடையான பல்கேரி, இந்திய வண்ண பண்டிகையான ஹோலி பண்டிகையை ‘ரோமன் ஹோலி’என்ற பெயரில் கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபல்கேரிய நகைக் கடையின் உலகளாவிய தூதராக உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி ‘ஸ்லிட் புடவை’ ரூ.8 கோடி மதிப்பு உள்ள :’பவ்ல்காரி நெக்லஸ்’ அணிந்து இருந்தார்.இஷா அம்பானியின் நெருங்கியதோழி பிரியங்கா ஆவார்.
அம்பானி வீட்டு பெண்களான இஷா அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்,ஷ்லோகா மேத்தா ஆகியோருடன் பிரியங்கா சோப்ரா, மகிழ்ச்சியாக புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதில் பங்கேற்ற அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் அம்பானியின் வீட்டில் இரவு ருசியான பல்சுவையான விருந்து வழங்கப்பட்டது.