தூத்துக்குடி:
திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் கடந்த 20-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, தவெக நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதைத்தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.