1 மணி நிலவரப்படி சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் , மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள்,பொதுமக்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

மக்களவை தேர்தலையொட்டி பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 44.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் வழக்கம்போல சென்னையில் வாக்குப்பதிவு மந்தநிலையில் காணப்படுகிறது. 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தில் கடைசி 3 இடங்களை சென்னை தொகுதிகள் பிடித்துள்ளது.

வடசென்னையில் 35.09 சதவீதமும், தென் சென்னையில் 33.93 சதவீதமும், மத்திய சென்னையில் 32.31% வாக்குகள் பதிவாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *