கரூரில்செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!!

கரூர்:
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக கரூரிலும் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் எம்.சி.சங்கர் ஆனந்த் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி.சங்கர் ஆனந்த் வீட்டிற்கு இரண்டு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் உள்ள கார்த்தி என்பவர் வீடு மற்றும் பள்ளப்பட்டி ஆசாத் நகர் பகுதியில் சென்னை உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றும் ரபிக் என்பவர் வீட்டிலும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 20 பேர் கொண்ட அதிகாரிகள் குழு கரூரில் முகாமிட்டு பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

எந்தப் புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. சோதனை நிறைவடைந்த பின்னர் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *