தனது பணிகளை கூடிய விரைவில் முடித்துக்கொண்டு, திரைப்படங்களில் இருந்து ஒரு குறுகிய கால மகப்பேறு விடுப்பு எடுக்கப் போவதாகவும் தெரிவித்த நடிகை சமந்தா!!

சென்னை:
பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய “மா இன்டி பங்காரம்” எனும் தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியானது.


இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்து, பெரும் வரவேற்பையும் பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் அள்ளினார். இப்படித்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் உலகளவில் ஐந்து நாட்களில் ₹50 கோடியைக் கடந்தது.

இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்துகொண்டார். அப்போது தனது ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி தரும் விஷியத்தை கூறினார்.


அவர் தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தியதோடு, தனது பணிகளை கூடிய விரைவில் முடித்துக்கொண்டு, திரைப்படங்களில் இருந்து ஒரு குறுகிய கால மகப்பேறு விடுப்பு எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.


இதனக்கேட்டதும் அங்குள்ள ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *