ரூ.4.53 லட்சம் கோடி இந்தியா வில் முதலீடு செய்கிறது அமேசான்!!

புதுடெல்லி:
அமெரிக்​கா​வைச் சேர்ந்த அமேசான், நடப்​பாண்டு முதல் 2030 வரையி​லான 4 ஆண்​டு​களில் மொத்​தம் 48 பில்​லியன் டாலர் (சுமார் ரூ4.53 லட்​சம் கோடி) முதலீடு செய்ய உள்​ள​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளது.

டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடியை, அமே​சான் நிறுவனத்தின் தலைமை நிர்​வாக அதி​காரி (சிஇஓ) ஆண்டி ஜாசி நேற்று நேரில் சந்​தித்​துப் பேசி​யதைத் தொடர்ந்து இந்த அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது.

பிரதமருட​னான இந்​தச் சந்​திப்​பின்போது, இந்தி​யா​வுட​னான அமே​சானின் நீண்​ட​கால உறவை ஆண்டி ஜாசி மீண்​டும் உறு​திப்​படுத்​தி​னார். இந்​தி​யா​வில் செயற்கை நுண்ணறிவு மற்​றும் கிளவுட் உள்​கட்​டமைப்​பு​களை மேம்​படுத்​து​வதற்​காக கூடு​தலாக 13 பில்​லியன் டாலர் முதலீடு செய்​யப்படும் என ஜாசி தெரி​வித்​தார்.

இதன் மூலம், 2026-2030 கால​கட்​டத்​தில் ஏஐ மற்​றும் கிளவுட் துறையில் அமே​சானின் ஒட்​டுமொத்த முதலீடு 21 பில்​லியன் டாலரைத் தாண்​டும் (இது ஒட்​டுமொத்த 48 பில்​லியன் டாலர் முதலீட்​டின் ஒரு பகு​தி​யாகும்).

பிரதமரைச் சந்​தித்த பின் ஆண்டி ஜாசி கூறுகை​யில், ”ஒரு தசாப்தத் துக்கு முன்பு நாங்​கள் இந்​தி​யா​வில் கால் பதித்​தோம். ஆன்​லைன் வர்த்​தகம், ஏஐ மற்​றும் கிளவுட் துறை​களில் இந்​திய மக்​களின் ஆதரவு அபார​மானது.

பிரதமர் மோடி​யின் ‘வளர்ச்சியடைந்த இந்​தி​யா’ மற்​றும் ‘சுய​சார்பு இந்​தி​யா’ ஆகிய தொலைநோக்கு பார்​வை​களால் நாங்​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளோம்.

இந்​தி​யா​வின் இந்த வளர்ச்​சிப் பயணத்​தில் அமே​சான் என்​றும் ஒரு நீண்​ட​கால பங்​காளி​யாகத் தொடரும்,” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *