மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறிய இந்திய மகளிர் அணி!!

லண்டன்:
மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி, அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா (38) மற்றும் சபாலி வர்மா (34) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 27 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இறுதி ஓவரில் மட்டும் இந்திய அணி 23 ரன்களை வாரிக் குவித்தது ரசிகர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது.

இருப்பினும், 171 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்தி ரேலிய அணி, ஒரு ஓவர் மீதமிருக்கையிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தை ஏற்படுத்திய போதிலும், மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.

அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 38 பந்துகளில் 56 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 53 ரன்களும் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் இந்த அசுரத்தனமான சேஸிங் காரணமாக, ஐந்து குரூப் போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றிருந்த போதிலும், ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் பின் தங்கி அரையிறுதிப போட்டியிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *