லண்டன்:
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இன்று லண்டனில் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
ஆண்டின் 3-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெறவுள்ளன.
ஆடவர் பிரிவில், நடப்புச் சாம்பியனான ஜன்னிக் சின்னர் (இத்தாலி), மகளிர் பிரிவில் நடப்புச் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து) உள்ளிட்டோர் இந்தமுறையும் களமிறங்குகின்றனர்.
மேலும் போட்டித் தரவரிசையில் மகளிர் பிரிவில் அரினா சபலென்காவும்(பெலாரஸ்), ஆடவர் பிரிவில் ஜன்னிக் சின்னரும் முதல் நிலையில் உள்ளனர்.
முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இன்று நடைபெறும் ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் டேனியல் மேத்வதேவும்(ரஷ்யா), மரின் சிலிச்சும்(குரோஷியா) மோதவுள்ளனர்.
மேலும் முதல் சுற்றில் ஜன்னிக் சின்னருடன், செர்பியா வீரர் மியோமிர் கெக்மானோவிக்கும் களம் காணவுள்ளார்.
மகளிர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபும், ஜெர்மனி வீராங்கனை தமாரா கோர்பாட்ஸும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
இந்த ஆண்டு விம்பிள்டன் பரிசுத்தொகை ரூ.821 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்குத் தலா ரூ.46 கோடி பரிசாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.