கான்பெரா:
இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கித். இவருக்கு ஸ்கை டைவிங்கில் அதிக ஆர்வம். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அங்கித் தனது தாத்தாவுடன் ஏற்கெனவே 15,000 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் 18,000 அடி உயரத்தில் இருந்து குதிக்க முடிவு செய்தனர்.
விமானத்தில் ஏறும்முன் அங்கித் தனது 80 வயது தாத்தாவிடம், பயப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.
அதற்கு தாத்தா ‘யார் பயந்தது என கூறி விமானத்தில் இருந்து பேரன் அங்கித்துடன் குதித்து பாராசூட் மூலம் பறந்து வந்து வெற்றிகரமாக தரையிறங்கினார்.
இந்திய தேசிய கொடியுடன் தரையிறங்கிய தாத்தா ‘ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ஜெய் ஹரியானா! என தேசபக்தியுடன் உற்சாகமாக குரல் கொடுத்தார்.
இந்த வீடியோவை அங்கித் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.