ஆஸ்திரேலியாவில் நடை​பெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்​தில் இருந்து குதித்த 80 வயது இந்திய தாத்தா!!

கான்பெரா:
இந்​தி​யா​வைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆஸ்திரேலியாவில் நடை​பெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்​தில் இருந்து குதித்த வீடியோ சமூக ஊடகத்​தில் வைரலானது.

இந்​தி​யா​வின் ஹரி​யானா மாநிலத்​தைச் சேர்ந்​தவர் அங்​கித். இவருக்கு ஸ்கை டைவிங்​கில் அதிக ஆர்​வம். ஆஸ்​திரேலி​யா​வில் வசிக்​கும் அங்​கித் தனது தாத்​தாவுடன் ஏற்​கெனவே 15,000 அடி உயரத்​தில் இருந்து குதித்​துள்​ளார்.

இந்​நிலை​யில் இரு​வரும் 18,000 அடி உயரத்​தில் இருந்து குதிக்க முடிவு செய்​தனர்.

விமானத்​தில் ஏறும்​முன் அங்​கித் தனது 80 வயது தாத்​தா​விடம், பயப்பட வேண்​டாம் என கூறி​யுள்​ளார்.

அதற்கு தாத்தா ‘யார் பயந்​தது என கூறி விமானத்​தில் இருந்து பேரன் அங்​கித்​துடன் குதித்து பாராசூட் மூலம் பறந்து வந்து வெற்​றிகர​மாக தரை​யிறங்​கி​னார்.

இந்​திய தேசிய கொடி​யுடன் தரை​யிறங்​கிய தாத்தா ‘ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ஜெய் ஹரி​யா​னா! என தேசபக்​தி​யுடன் உற்​சாக​மாக குரல் கொடுத்​தார்.

இந்த வீடியோவை அங்​கித் சமூக ஊடகத்​தில் பகிர்ந்​தார். இந்த வீடியோ வைரலாக பரவி வரு​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *