ரூ.3.23 கோடி மோசடி புகார்: ஓரிரு நாளில் விசா​ரணைக்கு நேரில் ஆஜராக வேண்​டும் என எ.வ.வேலு​வுக்கு லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் சம்​மன்!!

சென்னை:
நெடுஞ்​சாலைப் பணி​களை மேற்​கொள்​ளாமலே ஒப்​பந்​த​தா​ரர்​கள் ரூ.3.23 கோடி பெற்​ற​தாக எழுந்த புகார் தொடர்​பாக திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு, அரசு அதி​காரி​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் உட்பட 11 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் கடந்த 24-ம் தேதி வழக்​குப் பதிவு செய்​தனர்.

இதையடுத்​து, 25-ம் தேதி எ.வ. வேலு மற்​றும் சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் வீடு, அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டது.

சென்​னை​யில் 4 இடங்​கள், திரு​வண்​ணா​மலை – 4, கரூர் – 7, திண்​டுக்​கல் – 2, கோவை – 2, திருப்​பூர் – 1 என மொத்​தம் 20 இடங்​களில் சோதனை நடந்​தது.

இந்த சோதனை​யின்​போது, நெடுஞ்​சாலைத் துறை தொடர்​பான முக்​கிய ஆவணங்​கள், டிஜிட்​டல் சான்​றுகள், சொத்து மதிப்பு மற்​றும் முறை​கேட்டை உறு​திப்​படுத்​தும் பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள், கணக்​கில் வராத ரூ.40 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாக​வும், மேல் விசா​ரணை தீவிர​மாக நடந்து வரு​வ​தாக​வும் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் தெரி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், இந்த வழக்கு விவ​காரம் தொடர்​பாக ஓரிரு நாளில் விசா​ரணைக்கு நேரில் ஆஜராக வேண்​டும் என எ.வ.வேலு​வுக்கு லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் சம்​மன் அனுப்பி உள்​ளனர்.

போக்​கு​வரத்து துறை​யில் வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி ரூ.23 லட்​சம் மோசடி செய்​த​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் கடந்த 24-ம் தேதி அரியலூரை சேர்ந்த இளஞ்​செழியன் என்​பவர் கைது செய்​யப்​பட்​டார்.

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்​வாளர் சீனி​வாசன் அளித்த புகாரில் முன்​னாள் அமைச்​சர் சிவசங்​கருக்​கும் இந்த மோசடி​யில் தொடர்பு இருப்​ப​தாக புகாரில் தெரி​வித்​ததன் பேரில் முதல் தகவல் அறிக்​கை​யில் சிவசங்​கர் தொடர்​பான தகவல்​கள் இடம் பெற்று இருந்​தது.

இதையடுத்து சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் திமுக முன்​னாள் போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சிவசங்​கரை இன்று (1-ம் தேதி) விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு சம்​மன் அனுப்பி உள்​ளனர்.

அதன்​படி, அவர் ஆஜரா​வா​ரா? அல்​லது நீதி​மன்​றத்தை நாடு​வா​ரா? என்​பது இன்று தெரிய வரும்.

இதனிடையே, இளஞ்​செழியனை 7 நாள் (வரும் 6-ம் தேதிவரை) காவலில் விசா​ரிக்க எழும்​பூர் நீதி​மன்​றம் நேற்று அனு​மதி வழங்​கியது.

இதையடுத்​து, அவரை தனி இடத்​தில் வைத்து போலீ​ஸார் பண மோசடி தொடர்​பாக​வும், அதில் தொடர்​புடையவர்​கள்​ குறித்​தும்​ தொடர்​ந்​து வி​சாரித்​து வருகின்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *