அரசி​யலமைப்பு சட்​டத்தை மீறி, அரசுக்கு தொடர்​பில்​லாத நபர்​களை அரசு கூட்​டத்​தில் அனு​ம​தித்​த​தாக முதல்​வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி டிஜிபி​யிடம் திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி புகார்!!

சென்னை:
அரசி​யலமைப்பு சட்​டத்தை மீறி, அரசுக்கு தொடர்​பில்​லாத நபர்​களை அரசு கூட்​டத்​தில் அனு​ம​தித்​த​தாக முதல்​வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி டிஜிபி​யிடம் திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி நேற்று புகார் மனு அளித்​தார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: முதல்​வ​ராக பொறுப்​பேற்​றுள்ள விஜய், இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின்​படி ரகசியகாப்பு பிர​மாணம் எடுத்​துக் கொண்​ட​வர்.

அமைச்​சரவை கூட்ட விவாதங்​கள் மற்​றும் அரசின் முக்​கிய கொள்கை முடிவு​களை ரகசி​ய​மாக பாது​காக்க வேண்​டியது அவரது கடமை.

ஆனால், ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த ஜான் ஆரோக்​கிய​சாமி மற்​றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரு தனி நபர்​கள், சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நடை​பெறும் அமைச்​சரவை கூட்​டங்​கள், உயர்​மட்ட அரசு ஆய்​வுக் கூட்​டங்​கள் மற்​றும் ஆலோ​சனை​களில் தொடர்ந்து பங்​கேற்று வரு​கின்​றனர்.

மேலும், அரசு அதி​காரி​களுக்கு நேரடி​யாக உத்​தரவு பிறப்​பிப்​பது, கொள்கை முடிவு​களில் தலை​யிடு​வது போன்ற செயல்​களில் ஈடு​படு​கின்​றனர்.

இவர்​களுக்கு தலை​மைச் செயலக வளாகத்​துக்​குள் முதல்​வரின் அறைக்கு அரு​கிலேயே தனி அலு​வலக அறை​களும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

இவர்​கள் இரு​வரும் அரசு ஊழியர்​களோ தமிழக அரசின் அலு​வல் விதி​களின்​படி அங்​கீகரிக்​கப்​பட்​ட​வர்​களோ அல்ல.

அப்​படி​யிருக்​கும்​போது ரகசிய அரசு கோப்​பு​களை​யோ, அமைச்​சரவை ஆவணங்​களையோ பார்​வை​யிட இவர்​களுக்கு அனு​மதி வழங்​கி​யிருப்​பது அரசு ரகசிய காப்பு சட்​டத்தை மீறு​வ​தாகும்.

எனவே, இந்த விவ​காரத்​தில் பொது அதி​காரத்தை தவறாக பயன்​படுத்​துதல் உள்​ளிட்ட பிரிவு​களின்​கீழ் உடனடி​யாக முதல்​கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்​டும்.

தலை​மைச் செயல​கத்​தின் வரு​கைப்பதிவேடு​கள், சிசிடிவி காட்​சிகள் மற்​றும் கோப்பு நகர்வு பதிவேடு​களை ஆதா​ரங்​களாகக் கொண்​டு, முதல்​வர் விஜய் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட நபர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *