எனக்கு அமைச்​சர் பதவி ஆசை காட்டி தவெக​வில் சேரும்​படி சி.​விஜய​பாஸ்​கர் அழைத்​தார் – ஓ.எஸ்​.மணி​யன் எம்​எல்ஏ குற்றச்சாட்டு!!

நாகப்பட்டினம்:
எனக்கு அமைச்​சர் பதவி ஆசை காட்டி தவெக​வில் சேரும்​படி முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர் அழைத்​தார் என அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஓ.எஸ்​.மணி​யன் எம்​எல்ஏ குற்​றம்​சாட்​டி​னார்.

நாகை மாவட்​டம் வேதா​ரண்​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் சி.​விஜய​பாஸ்​கர், எம்​.ஆர்​. ​விஜய​பாஸ்​கர் ஆகிய இரு​வரும் தங்​கள் மீதான வழக்​கு​களில் இருந்து தப்​பிக் கொள்​ள​வும், சொத்​துகளை பாது​காத்​துக் கொள்​ளவுமே தவெக​வில் இணைந்​துள்​ளனர்.

சி.​விஜய​பாஸ்​கர் தன் மீது எத்​தனை வழக்​கு​கள் உள்ளன என்​பதை விளக்க வேண்​டும்.

தவெக அரசு சி.​விஜய​பாஸ்​கரின் சொத்து விவரங்​களை வெள்ளை அறிக்​கை​யாக மக்​களுக்கு தரவேண்​டும். 120 குவாரி​களை மூடி​விட்​ட​தாக தெரிவிக்​கும் கனிம வளத் துறை அமைச்​சர், சி.​விஜய​பாஸ்​கர் குவாரியில் நடப்​ப​தெல்​லாம் சட்​டப்​படி​தான் நடக்​கிறதா என்​பதை அறிவிக்க வேண்​டும்.

அத்​துடன், தவெக​வுக்கு அணி சேர்க்​கும் வேலை​யில் சி.​விஜய​பாஸ்​கர் ஈடு​பட்​டது நடத்​தைக் கெட்ட ஒரு மனிதனின் செயலுக்கு ஒப்​பானது.

அவர் என்னை தொலைபேசி​யில் அழைத்து ‘உங்​களுக்கு அமைச்​சர் பதவி காத்​துக் கொண்​டுள்​ளது’ என கூறி தவெக​வில் சேர அழைத்​தார். ஆனால், அந்​தப் பதவி​யும் சேர்த்து நீங்​களே வைத்​துக் கொள்​ளுங்​கள் என்று அவரிடம் கூறி​விட்​டேன்.

பதவி சுகத்தை அனுப​வித்​து​விட்​டு, வழக்​கு​களில் இருந்து தப்​பிக்க ஓடு​பவர்​களால் அதி​முக​வுக்கு பாதிப்பு எது​வும் ஏற்​ப​டாது.

தூய ஆட்​சியை தரு​வ​தாக கூறும் தவெக, குதிரை பேரத்​தில் ஈடு​படு​வதை தவிர்த்து மறு​தேர்​தலை சந்​திக்க தயா​ராக வேண்​டும். 2 எம்​எல்​ஏக்​களை வைத்​துக் கொண்டு ஆதரவு தரும் கட்​சிகள் மீதுள்ள அவநம்​பிக்​கை​யால் தான் தவெக குதிரை பேரத்​தில் ஈடு​படு​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *