மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு அரசு மரி​யாதை​யுடன் மைசூரு​வில் உள்ள பண்​ணைத் தோட்​டத்​தில் தகனம்!!

மைசூரு:
மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு அரசு மரி​யாதை​யுடன் மைசூரு​வில் உள்ள பண்​ணைத் தோட்​டத்​தில் தகனம் செய்​யப்​பட்​டது.

பிரபல பின்​னணிப் பாடகி எஸ்​.ஜானகி, மைசூரு​வில் நேற்​று​முன்​தினம் கால​மா​னார்.

அவருக்கு வயது 88. ஆந்​திர மாநிலம் குண்​டூர் மாவட்​டம் ரெபால்லி அரு​கிலுள்ள பல்​லப்​பட்டா கிராமத்​தில் 1938-ம் ஆண்டு பிறந்த ஜானகி, தனது 19-வது வயதிலேயே திரைத்​துறைக்கு வந்​து​விட்​டார்.

சுமார் 60 ஆண்டு கால​மாக, 48 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான பாடல்​களைப் பாடி சாதனை படைத்​துள்​ளார். தெலுங்​கு, தமிழ், கன்​னடம், மலை​யாளம், இந்​தி, ஒடி​யா, துளு, உருது, சிங்​களம் உட்பட 20 மொழிகளில் பாடி சாதனை படைத்​தவர். கான கோகிலா, தென்​னிந்​தி​யா​வின் நைட்​டிங்​கேல், இசையரசி என்​றும் புகழப்​படு​பவர் ஜானகி.

கே.​வி.ம​காதேவன், கண்​ட​சாலா, எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் – ராமமூர்த்​தி, ஜிகே வெங்​கடேஷ், இளை​ய​ராஜா, தேவா, ஏ.ஆர்​.ரஹ்​மான் என பல்​வேறு இசையமைப்​பாளர்​களின் இசை​யில் பாடி​யுள்​ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பக்​திப் பாடல்​களை எழுதி இசையமைத்​துப் பாடி​யுள்ள எஸ்​.ஜானகி, ‘மவுனப் போராட்​டம்’ என்ற தெலுங்​குப் படத்​துக்கு இசையமைத்​துள்​ளார்.

குழந்​தை​யாக​வும் பாட்​டி​யாக​வும் ஆண் குரலிலும் அரு​மை​யாகப் பாடி ஜாலங்​கள் நிகழ்த்​திய இவர், 4 முறை தேசிய விருதுகளைப் பெற்​றுள்​ளார். கடந்த 1977-ல் ‘16 வயதினிலே’ படத்​தில் ‘செந்​தூரப் பூவே’ பாடலுக்​காக​வும், 1981-ல் ‘ஒப்​போல்’ மலை​யாளப் படத்​துக்​காக ‘எட்​டுமனூரம்​பலத்​தில்’ பாடலுக்​காக​வும், 1984-ல் ‘சி​தா​ரா’ தெலுங்​குப் படத்​துக்​காக ‘வெண்​ணல்லோ கோதாரி அந்​தம்’ பாடலுக்​காக​வும், 1992-ல் ‘தேவர் மகன்’ படத்​தில் ‘இஞ்சி இடுப்​பழ​கா’ பாடலுக்​காக​வும் தேசிய விருதுகளைப் பெற்​றுள்​ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு சினி​மா​வில் இருந்து வில​கிய எஸ்​.ஜானகி, மகனுடன் மைசூரு​வில் வசித்து வந்​தார். அவரது கணவர் வி.​ராம்​பிர​சாத் 1997-ம் ஆண்டு கால​மா​னார்.

அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா, கடந்த ஜனவரி​யில் உடல்​நலக் குறைவு காரண​மாகக் கால​மா​னார். இது ஜானகிக்கு மிகுந்த மன வருத்​தத்​தைக் கொடுத்​தது.

அந்த கவலை காரண​மாக ஜானகி​யின் உடல் நிலை பாதிக்​கப்​பட்​டது. கடந்த சில மாதங்​களாகவே அவர் உடல்​நலக் குறை​வால் அவதிப்பட்டு வந்​தார்.

நேற்​று​முன்​தினம் அவர் உடல் நிலை மேலும் மோச​மானதை அடுத்​து, அங்​குள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டும் மாரடைப்பு ஏற்​பட்​டுக் கால​மா​னார்.

தென்​னிந்​திய பாடகி​களில் தனக்​கென தனி அடை​யாளத்​தைக் கொண்​டிருந்த ஜானகி​யின் மறைவு அவரது ரசிகர்​களைச் சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்

​ளது. அவர் மறைவுக்​குக் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, தமிழக முதல்​வர் விஜய், கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவ​கு​மார், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இசை அமைப்​பாளர் இளை​ய​ராஜா, பாடகி பி.சுசீலா உட்பட பல அரசி​யல் மற்​றும் திரை​யுல​கினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

மறைந்த எஸ்​.ஜானகி​யின் உடல், மைசூரு மகா​ராஜா கல்​லூரி மைதானத்​தில் பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக நேற்று காலை 8 மணி​யள​வில் வைக்​கப்​பட்​டது.

அங்கு பொது​மக்​கள், பாடகர்​கள், பாடகி​கள், அரசி​யல் பிர​முகர்​கள், ரசிகர்​கள் உட்பட ஏராள​மானோர் அஞ்​சலி செலுத்​தினர்.

பின்​னர் பிற்​பகல் 3 மணி​யள​வில் அலங்​கரிக்​கப்​பட்ட வாக​னத்​தில் எஸ்​.ஜானகி​யின் உடல் ஊர்​வல​மாக, கனியனஹண்​டி​யில் உள்ள அவரது பண்​ணைத் தோட்​டத்​துக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டது.

அங்கு அவரது குடும்​பத்​தினர் இறு​திச் சடங்​கு​களைச் செய்​தனர். கர்​நாடக அரசு சார்​பில் அமைச்​சர்​கள் மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தினர்.

அதைத் தொடர்ந்து 30 குண்​டு​கள் முழங்க, அரசு சார்​பில் இறுதி அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது.

பின்​னர் அவரது உடல் உறவினர்​கள் சூழ, தகனம் செய்​யப்​பட்​டது. அவரது பேத்தி அப்​சரா வைத்​யுலா இறு​திச் சடங்​கு​களைச் செய்​தார்.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘கன்னட திரையுல கினருடன் ஆலோசனை நடத்திய பிறகு, மறைந்த பாடகி எஸ்.ஜானகிக்கு நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *