வேளச்​சேரி மேம்​பாலம் அருகே பராமரிப்​புக்​காக எடுத்​துச் செல்​லப்​பட்ட பள்ளி வேன் திடீரென தீப்​பிடித்து எரிந்​த​தால் அப்​பகு​தி​யில் பெரும் பரபரப்பு !!

சென்னை:
வேளச்​சேரி மேம்​பாலம் அருகே பராமரிப்​புக்​காக எடுத்​துச் செல்​லப்​பட்ட பள்ளி வேன் திடீரென தீப்​பிடித்து எரிந்​த​தால் அப்​பகு​தி​யில் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது. கடும் போக்​கு​வரத்து நெரிசலால் வாகன ஓட்​டிகள் அவதிப்​பட்​டனர்.

சென்​னை​யில் இயங்கி வரும் ஒரு தனி​யார் பள்​ளிக்கு சொந்​த​மான வேன், வழக்​க​மான பராமரிப்பு பணிக்​காக நேற்று மாலை எடுத்​துச் செல்​லப்​பட்​டது. வேளச்சேரி மேம்​பாலம் அருகே சென்​ற​போது, வேனின் இன்​ஜின் பகு​தி​யில் இருந்து திடீரென புகை வெளி​யேறியது.

அதிர்ச்சி அடைந்த ஓட்​டுநர் உடனடி​யாக வேனை சாலை​யோர​மாக நிறுத்தி கீழே இறங்​கி​னார். சில நிமிடங்​களில் இன்​ஜின் பகு​தி​யில் ஏற்​பட்ட தீ மளமளவென பரவி வேன் முழு​வதும் எரி​யத் தொடங்​கியது.

இதுகுறித்து, தகவல் அறிந்​ததும் வேளச்​சேரி, மேட​வாக்​கம் ஆகிய இடங்​களில் இருந்து தீயணைப்பு வீரர்​கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்​தனர்.

தீ விபத்​தில் வேன் முற்​றி​லும் எரிந்து சேதமடைந்​தது. வேன் தீப்​பிடித்து எரிந்​த​தால், வேளச்​சேரி மேம்​பாலம் மற்​றும் அதனை ஒட்​டிய சாலைகளில் வாக​னங்​கள் நீண்ட வரிசை​யில் அணிவகுத்து நின்​றன.

இதனால் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து தீ விபத்​துக்​கான காரணம் குறித்து தொடர்ந்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *