அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு விவரம்!!

சென்னை: 

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது.

சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதேபோல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும் அமித்ஷாவை சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர்.

இதன்படி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் எனவும் அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *