பெங்களூரு:
பெங்களூரு மாநகர எல்லைக்குட்பட்ட பானஸ்வாடி காவல் நிலையத்துக்குட்பட்ட கம்மனஹள்ளியில் கார் நிறுத்தும் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது 3 பேர் போதைப் பொருளை காரில் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 3 இடங்களில் மொத்தம் 13.13 கிராம் எம்டிஎம்ஏ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தவிர இந்திரா நகர், அசோக் நகர், கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் 181 கிராம் கோகைன், 59.32 கிலோ கஞ்சா, 7 கிலோ ஓப்பியம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மதிப்பு ரூ.15 கோடி. இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் 6 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 10 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.