தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த மதி தீபாவளி பரிசு பெட்டகம் !!

சென்னை:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் பல்வேறு பொருட்களைத் தயாரித்து வருகின்றன.

இப்பொருட்கள் விழாக் காலத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு, கார வகைதின்பண்டங்கள் அடங்கிய ‘மதி தீபாவளி பரிசு பெட்டகம்’ தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த பரிசு பெட்டகத்தில் இனிப்பு,கார வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தீபாவளி பண்டிகைக்கு பரிசளிக்கும் வகையில் அலங்கார பரிசு பொருட்கள் ஆகியவையும் விற்கப்படுகின்றன.

இவற்றை மொத்தமாகவோ, சிறிய அளவிலோவாங்க விரும்பும் பொதுமக்கள், www.tncdw.org என்ற இணையதளம், 76038 99270 என்ற செல்போன் எண் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.


அக்.23 வரை நடத்தப்படவிருந்த விற்பனை தற்போது அக்.25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் உள்ள மதி அனுபவ அங்காடியை அணுகலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *