பாஜக தேசிய மகளிரணி தலை​வர் பொறுப்​பில் இருந்து விடுவிக்​கப்​பட்​டதற்கு அரசி​யல் காரணங்​கள் எது​வும் இல்லை ; வானதி சீனி​வாசன் !!

கோவை:
பாஜக தேசிய மகளிரணி தலை​வர் பொறுப்​பில் இருந்து தான் விடுவிக்​கப்​பட்​டதற்கு அரசி​யல் காரணங்​கள் எது​வும் இல்லை என வானதி சீனி​வாசன் தெரி​வித்​துள்​ளார்.

கோவை தொண்​டா​முத்​தூரைபூர்​வீக​மாக கொண்ட வானதி சீனிவாசன், கடந்த 2021-ம் ஆண்டு முதல் பாஜக​வின் தேசிய மகளிரணி தலை​வ​ராக பதவி வகித்து வந்​தார்.

6 ஆண்​டு​கள் ஆன நிலை​யில், நேற்று இப்​பொறுப்​பில் இருந்து வானதி சீனி​வாசன் விடுவிக்​கப்​பட்​டார்.

பதவி விடு​விப்​பு, பாஜக​வில் நடக்​கும் வழக்​க​மான நடவடிக்​கை​தான் என அக்​கட்​சி​யின் நிர்​வாகி​கள் தரப்​பில் கூறப்​பட்​டாலும், அரசி​யல் காரணங்​கள் பின்​னணி​யில் உள்​ளதா என்ற கேள்​வி​யும் எழுந்​துள்ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எதிர்​பார்த்த வெற்றி கிடைக்​காதது, மத்​திய அரசின் திட்​டங்​களை மகளிரிடம் சரி​யான முறை​யில் எடுத்​துச் செல்​லாதது போன்​றவை இவரது மாற்​றத்​துக்கு காரணங்​களாக இருக்​கலாம் என்ற கருத்து நில​வு​கிறது.

இதுதொடர்​பாக கோவை பாஜக நிர்​வாகி​கள் கூறும்​போது, “பாஜக​வில் ஒருவருக்கு கட்​சிப் பதவி 3 ஆண்​டு​கள், அதி​கபட்​சம் 6 ஆண்​டு​கள் தான். அந்த காலக்கெடு முடிந்​த​தால் தான் தேசிய பொறுப்​பில் இருந்து வானதி சீனி​வாசன் விடுவிக்​கப்​பட்​டார்.

மகளிர் அணி என்​பது ஒரு சார்பு அணி தான் அதிலிருந்து விடுவிக்​கப்​பட்ட வானதி சீனிவாசனுக்கு கட்​சி​யில் வேறு முக்​கிய பொறுப்​பு​கள் கொடுக்​கப்​படலாம்.

அதே​போல், தமிழக பாஜக தலை​வர் மாற்​றப்​படலாம் என்ற பேச்​சுக்​கள் உலவு​கின்​றன.

புதிய தலை​வர் பட்​டியலில் அஸ்​வத்​தாமன், பேராசிரியர் சீனி​வாசன், வானதி சீனி​வாசன் ஆகியோரின் பெயர்​கள் பரிசீலிக்​கப்​படு​வ​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

ஒரு​வேளை மாநில தலை​வர் பொறுப்​பும் கூட அவருக்கு கிடைக்க வாய்ப்​பு​கள் உள்​ளன” என்​றனர்.

இதுதொடர்​பாக வானதி சீனி​வாசன் கூறும்​போது, “நான் கடந்த 2021 முதல் 2026-ம் ஆண்டு வரை தொடர்ந்து 6 ஆண்​டு​கள் தேசிய மகளிரணி தலை​வ​ராக பதவி வகித்​துள்​ளேன்.

இந்த காலக்​கட்​டத்​தில் பாஜக தலைமை எனக்கு அளித்த அரசி​யல் ரீதி​யான அனைத்து பணி​களை​யும் திறம்பட நிறைவேற்​றி​யுள்​ளேன்.

தேசிய மகளிரணி தலை​வர் பொறுப்​பில் இருந்து என்னை விடு​வித்​தது என்​பது வழக்​கமான நடை​முறைதான். என்னை பதவியில் இருந்து விடு​வித்​ததன் பின்​னணியில் சட்​டப்​பேர​வைத் தேர்தல் தோல்வி உள்​ளிட்ட எந்த அரசியல் காரணங்​களும் இல்​லை.

எனது உழைப்​பை​யும், பணி​களை​யும் கட்சி நிச்​ச​யம் பயன்​படுத்​தும் வகை​யில் வேறு பொறுப்பு வழங்​கப்​படும் என எதிர்​பார்க்​கிறேன். பொறுப்பு இல்லை என்​றாலும், தொய்​வின்றி எனது கட்​சிப் பணி தொடரு​ம்” என்​றா

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *