நாடு முழு​வதும் 20 ஆயிரம் இடங்​களில் குடிநீர் வசதி மேம்​பாட்​டுத் திட்​டத்தை செயல்​படுத்த ரயில்வே துறை முடிவு!!

சென்னை:
ரயில் நிலைய குடிநீரில் பாக்​டீரியா தொற்று என சிஏஜிஅறிக்​கை​யில் வெளிவந்​ததையடுத்​து, நாடு முழு​வதும் 20 ஆயிரம் இடங்​களில் குடிநீர் வசதி மேம்​பாட்​டுத் திட்​டத்தை செயல்​படுத்த ரயில்வே துறை முடிவு செய்​துள்​ளது.

ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்கு குளிரூட்​டிகளில் வழங்​கப்​படும் இலவச குடிநீரை பரிசோதனை செய்​த​தில், ‘ஈ – கோலி’ பாக்​டீரியா இருப்​பது சிஏஜிஎனப்​படும் இந்​திய தலைமை கணக்கு தணிக்கை அலு​வல​கம் ஆய்​வில் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், ரயில்வே வாரி​யத் தலை​வர் மற்​றும் தலைமை செயல் அதி​காரி மற்​றும் உயர் அதி​காரி​களு​டன் இணைந்து கடந்த 16-ம் தேதி ஆலோ​சனை நடத்​தி​னார்.

அதன்​படி, முதல்​கட்​ட​மாக, ரயில்வே முழு​வதும் உள்ள வாட்​டர் கூலர்​கள் உட்பட 20 ஆயிரம் இடங்​களில் புதிய ‘டேங்க் டு டாப்’ குடிநீர் சுத்​தி​கரிப்பு மற்​றும் கண்​காணிப்பு அமைப்​பு​கள் நிறுவ முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோ​சனை குழு உறுப்​பினர் ஜாபர் அலி கூறிய​தாவது:

நாடு முழு​வதும் ரயில் நிலை​யங்​களில் குடிநீரின் தரத்தை உடனடி​யாக மேம்​படுத்த மத்​திய ரயில்வே அமைச்​சகம் உத்​தர​விட்​டுள்​ளது.

குடிநீர் விநி​யோகத்​தில் உடனடி​யாகச் சீர்​திருத்​தங்​களை மேற்​கொள்ள அதி​காரி​களுக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

தேவைப்​படும் இடங்​களில் பழைய நீர் தேக்​கத் தொட்​டிகளை அகற்​றி​விட்​டு, புதிய தொட்​டிகளை அமைக்க ரயில்வே முடிவு செய்​துள்​ளது.

குடிநீர் ஆதா​ரங்​கள் மற்​றும் விநி​யோக மையங்​கள் ஆகிய இரண்​டிலும் வழக்​க​மான நீர் தரப் பரிசோதனை​களை உறுதி செய்ய அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

கண்​காணிப்​பு, தொட்​டிகளை சுத்​தம் செய்​தல் மற்​றும் குடிநீர் தர அறிக்​கைகளை வெளி​யிட்டு வெளிப்​படைத்​தன்​மை​யைப் பேண​வும் ரயில்வே துறை முடிவு செய்துள்​ளது.

முதல்​கட்​ட​மாக, 20 ஆயிரம் இடங்​களில் குடிநீர் மேம்​பாட்டு திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

பின்​னர், படிப்​படி​யாக பல்​வேறு இடங்​களுக்​கும் விரிவுப்​படுத்​தப்​பட​வுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *