50 ஓவர் உலகக் கோப்பை யை இந்திய அணி நிச்சயம் வெல்லும்: இந்​தி​யக் கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் (பிசிசிஐ) துணைத் தலை​வர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை!!

திருப்பதி:
இந்​தி​யக் கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் (பிசிசிஐ) துணைத் தலை​வர் ராஜீவ் சுக்​லா, நேற்று திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் சாமி தரிசனம் செய்​தார். தரிசனத்​துக்​குப் பின்​னர் அவர், நிருபர்​களிடம் கூறிய​தாவது:

அனை​வரின் நலனுக்​காக​வும் வேண்​டிக்​கொள்​ளவே இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்​துள்​ளேன்.

2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்​பையை இந்​திய அணி நிச்​சய​மாகக் கைப்​பற்​றும். உலகக் கோப்பை தொடருக்​காக இந்​திய அணி வீரர்​கள் முழு வீச்​சில் தயா​ராகி வரு​கின்​றனர்.

அணி​யில் இளம் வீரர்​களுக்​குத் தேவை​யான அளவு வாய்ப்​பு​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

சமீபத்​தில் இலங்கை அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்​துள்ள நிலை​யில், அடுத்​த​தாக நியூஸிலாந்து மற்​றும் ஆஸ்​திரேலிய தொடர்​களுக்​கான ஆயத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *