திருப்பதி:
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்குப் பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
அனைவரின் நலனுக்காகவும் வேண்டிக்கொள்ளவே இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளேன்.
2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயமாகக் கைப்பற்றும். உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
அணியில் இளம் வீரர்களுக்குத் தேவையான அளவு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.