காத்மாண்டு:
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்ளது.
4,400 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு நேற்று 7-வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
4,400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதில் 583 பேர் வெளிநாட்டினர் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெருவெள்ளம் பாதித்த பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பாலங்கள் உடைந்துள்ளன.
அங்கு தற்காலிக பாலங்களை அமைக்க இந்தியாவின் உதவியை நேபாள அரசு கோரியுள்ளது. இந்திய பொறியாளர்கள் குழு நேபாளத்தில் முகாமிட்டு தற்காலிக பாலங்களை அமைத்து வருகிறது.
மேலும் நேபாளத்தின் நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய சுமார் 900 தொழிலாளர்களை காணவில்லை.
இரு இந்தியக் குழுக்கள் நேபாளத்தில் முகாமிட்டு சுரங்க மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நேபாள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் காத்மாண்டுவில் நேற்று கூறும்போது, “பெருவெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 11,800 பேரை பத்திரமாக மீட்டு உள்ளோம்.
4,400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மரபணு சோதனை மூலம் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக் கப்படுகின்றன.
இந்த பணிக்கு இந்தியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன” என்று தெரிவித்தார்.