இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் எல்லைக்குள் நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் இருவர் அதிரடி கைது…

அசாம் ;

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து அசாமின் துப்ரியில் சட்டவிரோதமாக நுழைந்த இரு பயங்கரவாதிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு அமைப்பின் ’தேடப்படுவோர்’ பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்த இருவரும், பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் தொடர்பானவர்கள். ஐஎஸ்ஐஎஸ் இந்திய தலைவரான ஹரிஸ் ஃபரூக்கி மற்றும் அவரது சகாவான ரெஹான் ஆகியோர் இந்த வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அசாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை வங்காளதேசத்தை ஒட்டிய சர்வதேச எல்லை நெடுக தீவிர வேட்டையில் ஈடுபட்டது.

அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மஹந்தா தலைமையிலான சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் துப்ரியில் உள்ள தர்மசாலா பகுதியில் எல்லை தாண்டி பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகளும் இன்று கைது செய்யப்பட்டனர்.

இந்தியா முழுவதும் பல இடங்களில் நாசவேலை, பயங்கரவாதச் செயல்களுக்கான சதித்திட்டங்கள், நிதி சேகரிப்பு மற்றும் ஆட்களை அமர்த்துதல் ஆகியவற்றில் இந்திய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரையும் என்ஐஏ வசம் அசாம் சிறப்பு அதிரடிப்படை மேல் விசாரணைக்காக ஒப்படைக்க உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *