கடலில் மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்ப ங்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊக்கத்தொகை ரூ.350-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும்; அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு!!

சென்னை:
சட்டப்பேரவையில் நேற்று மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் ரூ.24 லட்சத்தில் வளர்ச்சி முடக்கப்பட்ட மீன் விரலிகள் உற்பத்திப் பிரிவு புதிதாக நிறுவப்படும்.

திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் நவீன மீன் சந்தை அமைக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ஒருங்கிணைந்த வெப்பநிலை கட்டுப்படுத்தும் டிஜிட்டல் மின் ஏலக்கூடம் அமைக்கப்படும்.

மீன் வளம் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் வளர்ப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் திறனறி தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.

கடலில் மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊக்கத்தொகை ரூ.350-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும்.

அண்டை நாட்டினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளின் உரிமையா ளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 24 அறிவிப்புகளை வெளியிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *