பணி​யிடத்​தில் பாது​காப்பை உறுதி செய்​வது என்​பது ஒரு சட்​டப்​பூர்வ கடமை​யாக மட்​டுமின்​றி, தொழில்துறை கலா​ச்சா​ர​மாக இருக்க வேண்​டும் – அமைச்சர் கணேசன் வலியுறுத்தல்!!

சென்னை:
பணி​யிடத்​தில் பாது​காப்பை உறுதி செய்​வது என்​பது ஒரு சட்​டப்​பூர்வ கடமை​யாக மட்​டுமின்​றி, தொழில்துறை கலா​ச்சா​ர​மாக இருக்க வேண்​டும் என்று மாநில பாது​காப்பு விருதுகள் வழங்​கும் விழா​வில் அமைச்​சர் சி.​வி.கணேசன் வலி​யுறுத்​தி​னார்.

தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்​ககம், தேசிய பாது​காப்பு குழு​மம் சார்​பில். சென்னை கோட்​டூர்​புரம் அண்ணா நூற்​றாண்டு நூல​கத்​தில், மாநில பாது​காப்பு விருதுகள், உயர்ந்த உழைப்​பாளர் விருதுகள் வழங்​கும் விழா நேற்று நடை​பெற்​றது.

விழா​வில், தொழிலா​ளர் துறை அமைச்​சர் சி.​வி. கணேசன், 196 தொழிற்சாலை நிர்​வாகத்​தினருக்கு மாநில பாதுகாப்பு விருதுகள், 122 தொழிலா​ளர்களுக்கு உயர்ந்த உழைப்பாளர் விருதுகளை வழங்​கி​னார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: பணி​யிடத்​தில் பாது​காப்பை உறுதி செய்​வது என்​பது சட்​டப்​பூர்வ கடமை​யாக மட்​டுமின்​றி, தொழில்துறை கலாச்​சா​ர​மாக இருக்க வேண்​டும்.

பட்​டாசு தொழிற்​சாலைகளில் ஏற்​படும் விபத்​துகளில் உயி​ரிழக்​கும் தொழிலா​ளர்​களின் குழந்​தைகளுக்கு கல்வி உதவித்​தொகை, அவர்​கள் 18 வயது நிறைவு செய்​யும் வரை மாதாந்​திர பராமரிப்பு தொகை வழங்​கும் திட்​டம் மூலம் 134 குழந்​தைகள் பயன்பெறுகின்​றனர்.

பெண் தொழிலா​ளர்​கள் பாது​காப்​பாக பணியாற்ற, 20 ஆயிரம் தொழிலா​ளர்​கள் தங்​கும் வகை​யில் ரூ.700 கோடி மதிப்​பில் தங்​கும் வசதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்​வில், தொழிலா​ளர் நலத்​துறை செயலர் கோ.வீர​ராகவ ராவ், தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்​குநர் செ.ஆனந்த். தேசிய பாது​காப்பு குழும தமிழக பிரி​வின் செய​லா​ளர் ராஜ்மோகன் பழனிவேல்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *