திருச்சி;
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் வளாகத் தில் அமைந்துள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சி யில் எழுந்தருளியுள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி நாளன்று மாபெரும் கொழுக் கட்டை நிவேதனம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் சமையல் கூடத்தில் 150 கிலோ எடையுள்ள கொழுக் கட்டை தயாரிக்கப்பட்டது.
இந்த பிரமாண்ட கொழுக்கட்டை இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இன்று காலை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ வீதம் கொண்டு செல்லப்பட்டது.
தொட்டில் கட்டி சுமந்து செல்லப்பட்ட கொழுக்கட்டையை சுவாமிக்கு படைத்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பூஜைகள் முடிந்த பின்னர், கொழுக்கட்டை பிரசாதமாக உடைக்கப்பட்டு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
விநாயக பெருமானுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே திரளான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக இன்று காலை 4.30 மணிக்கு கண-பதி ஹோமத் துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை கோவிலில் தரிசனம் செய்ய திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட் டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
குடவரை கோவிலான இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில் அங்குச தேவரும், சிவனின் அஸ்திர தேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர்.
அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகை யான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடை பெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.
சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.