குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி: 22-ந்தேதி கும்பாபிஷேகம்… !!

காஞ்சிபுரம், மேற்கு ராஜ வீதியில் புகழ்பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றப்பட்ட குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருப்பணிகளுக்காக கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி பாலாலயம் நடைபெற்றது.

தொடர்ந்து ரூ.66.48 லட்சம் மதிப்பீட்டில் 16 வகையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்து உள்ளது.


புனரமைப்பு பணிகள் முடிந்ததை தொடர்ந்து குமர கோட்டம் முருகன் கோவிலில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று காலை கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவில் செயல் அலுவலர், கும்பாபிஷேக விழா கமிட்டி உறுப்பினர்கள் ராதா கிருஷ்ணன், முருகேசன், துரைப்பாசையப்பன் பங்கேற்றனர்.

பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் விழா தொடக்கத்தால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *