2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம்

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு கேது சேர்க்கை உள்ளது. ஆன்மீக பயணம் அதிகரிக்கும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். இதனால் நல்ல மனநிலை நீடிக்கும். தொட்டது துலங்கும். மனம் பரவச நிலையில் இருப்பதல் நினைத்தது நடக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலமாகும்.

உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் உண்டு. ராகு கேது பெயர்ச்சி இன்னும் ஒரு மாதத்தில் நடக்க இருப்பதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சில சங்கடங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்குவீர்கள்.

தொழில் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் திடீர் அதிர்ஷ்டம் யோகம் தேடி வரும்.

கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். இளம் பருவத்தினருக்கு திருமண வாய்ப்பு கைகூடி வரும். உயர் கல்வியில் நிலவிய தடைகள் விலகும். தீபாவளி விடுமுறையை மகிழ்ச்சியுடன் செலவழிக்க திட்டமிடுவீர்கள். அரசாங்க கடைநிலை ஊழியர்களுக்கு தீபாவளி உணவு உடை தானம் வழங்கவும்.

ரிஷபம்

கவுரவமான உத்தியோகம் கிடைக்கும் வாரம். ராசி மற்றும் 6ம் அதிபதி சுக்ரன் வக்ர கதியில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுவதால் கவுரமான அரசு வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலன் முற்றிலும் நலம் பெறும்.

வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்கள் தீபாவளிக்கு பூர்வீகம் வந்து செல்ல வாய்ப்புள்ளது. இடப் பெயர்ச்சியால் நல்ல பலன்கள் ஏற்படும். தொழிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு உங்களை உற்சாகப்படுத்தும்.

புதிய சொத்துச் சேர்க்கை ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சுப விரய செலவுகள் வீடு தேடி வரும்.

பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க கடுமையாக உழைப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். பருவ வயது பிள்ளைகளை பெற்றோர்கள் நேரடி கவனிப்பில் வைப்பது நல்லது. வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு தூக்கம் குறையும்.

இன்பமும், துன்பமும் இணைந்த காலகட்டமாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு இனிப்பு தானம் வழங்கவும்.

மிதுனம்

பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும் வாரம். 5,12ம் அதிபதி சுக்ரன் வக்ர கதியில் நீச்சம் பெறுவதால் உச்ச பலன் பெறுகிறார். லாட்டரி, பங்குச் சந்தை வணிகம் உத்வேகம் பெறும். அரசியல் ஆதாயம் உண்டு. புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு நிச்சயமாக கிடைக்கும்.

தொழிலில் வெற்றி கிடைக்கும். நன்மைகள் இரட்டிப்பாகும். பணபலம் அதிகமாகும். தொட்டது துலங்கும். நினைத்த காரியம் வெற்றியைத் தரும். போட்டி பந்தயங்களில் அமோக வெற்றி வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.

போட்டி பந்தயங்கள் வெற்றி தரும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். ராகு தொழில் ஸ்தானத்தை விட்டு விலகும் நேரம் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். கடன்கள் அடைபடும்.

எதிரிகள் தொல்லை ஒழியும். குடும்பத்திற்கு வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். தீபாவளி பண்டிகைக்கு ஆடம்பரமான துணிகள் பொருட்கள் வாங்குவீர்கள்.

திருமண முயற்சிகளில் திருப்புமுனை உண்டாகும். மனதில் அமைதியும், ஆனந்தமும், நிம்மதியும் குடிபுகும். மகிழ்ச்சியை அதிகரிக்க தீபாவளி பண்டிகைக்கு உணவு உடை தானம் வழங்கவும்.

கடகம்

நிம்மதியுடன் செயல்படும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, கேது சேர்க்கை உள்ளது. பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கட்டுமான தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையினர் கை நிறைய பணத்தைப் பார்ப்பார்கள் நிலம், கட்டிடம் வாங்கி விற்பதில் சாதனை படைப்பார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நகைகள் வாங்கி சேமிப்பீர்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு சேரும்.

வீடு, நிலம் வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். தொழில் வியாபாரத்தில் எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வந்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன் ஏற்பாடுகளை செய்வீர்கள். புதிய நண்பர்களின் நட்பு ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவு மனக்கவலைக்கு மருந்தாக அமையும்.

வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும். ஆரோக்கிய குறைபாடு அகலும். சக்திக்கு மீறிய கடன் தேவையற்ற பேச்சை குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். சாதுக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஆடை தானம் வழங்கவும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *