திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி புஷ்ப யாகம்!!

திருப்பதி;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம் நவம்பர் 15-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். புஷ்ப யாகம் நடைபெறுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் உற்சவர்கள் சம்பங்கி பிரகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரை பல்வேறு வகையான பூக்கள் மற்றும் இலைகளுடன் சாமிக்கு புஷ்பயாகம் செய்யப்படும். மாலையில் நடைபெறும் சகஸ்ர தீபாலங்கர சேவைக்கு பிறகு, ஏழுமலையான் கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

இதன் காரணமாக, நவம்பர் 16-ந் தேதியன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் பிரமோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


திருப்பதியில் நேற்று 83,609 பேர் தரிசனம் செய்தனர். 24,816 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.95 உண்டியல் காணிக்கை வசூலானது. 4.41 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.
20 மணி நேரம் காத்திருப்பு

நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *