திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்… !!

திருத்தணி முருகன் கோவிலில் நாளை கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பின்னர் தொடர்ந்து 6 நாட்களும் காலை, 8 மணி முதல் இரவு, 8 மணி வரை உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை நடத்தப்படும்.

நாளை மூலவருக்கு புஷ்ப அலங்காரம்,11-ந் தேதி மூலவருக்கு பட்டு அலங்காரம், 12-ந் தேதி தங்ககவசம், 13-ந் தேதி திருவாபரணம், 14-ந் தேதி வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது.

15-ந் தேதி, காலையில் சந்தன காப்பு அலங்காரம், மாலை, 5 மணிக்கு உற்சவர் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனை நடைபெறும். 16-ந் தேதி காலை, 10 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சஷ்டி விழா பிரஸ்தார பூஜையின்போது, 10-ந் தேதி, மாலை 7 மணி முதல் இரவு, 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.

அதே போல் 11-ந் தேதி முதல் முதல், 14-ந் தேதி வரை காலை 8 மணி முதல், காலை 10.30 மணி வரையும், 15-ந் தேதி மாலை 7.30 மணி முதல் இரவு, 10.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சஷ்டி விழா விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் நித்யா, அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *