என்னுடைய தாத்தா எனக்குக் கொடுத்த ருத்ராட்ச மாலையைத்தான் எப்போதும் அணிந்திருக்கிறேன்!! சாய் பல்லவி….

சென்னை: ​
தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

சினிமாவாக இருந்தாலும் சரி, நிஜ வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சாய் பல்லவியின் கையில் எப்போதும் ஒரு ருத்ராட்ச மாலை கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.

அது வெறும் அலங்காரத்திற்காக அணியப்படும் ஆபரணம் அல்ல; அதன் பின்னால் அழகான பாசமும், உணர்வுபூர்வமான நினைவுகளும் ஒளிந்திருக்கின்றன.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

”நான் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டவள். என்னுடைய தாத்தா எனக்குக் கொடுத்த ருத்ராட்ச மாலையைத்தான் எப்போதும் அணிந்திருக்கிறேன்.

அது எனக்கு வெறும் ஆபரணம் மட்டுமல்ல. என் தாத்தாவுடனான பிணைப்பையும், அவருடைய நினைவுகளையும் எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும் ஒரு பொக்கிஷம்.

நம் வாழ்க்கையில் சில பொருட்களுக்கு உணர்வுபூர்வமான மதிப்பு இருக்கும். அந்த வகையில் இந்த ருத்ராட்ச மாலையும் எனக்கு மிகவும் முக்கியமானது.

இதை அணியத் தொடங்கிய பிறகுதான் எனக்குப் பிரார்த்தனை செய்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. மனதை அமைதியாக வைத்துக்கொள்ள நான் அதிகமாக தியானம் செய்வேன்.

அப்போதும் இந்த ருத்ராட்சம் எனக்கு ஒருவிதமான துணையாக இருக்கிறது. இந்த மாலை என்னிடம் இருக்கும்போது என்னுடைய எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தேவையில்லாமல் அதிகமாகச் சிந்திப்பதும் குறைகிறது”.
இவ்வாறு அவர் கூறினார்.

சினிமாவில் எத்தனையோ விலை உயர்ந்த ஆபரணங்களை அணிய வாய்ப்பிருந்தாலும், தாத்தா அன்போடு கொடுத்த ருத்ராட்ச மாலையை மட்டும் எப்போதும் கையில் சுமந்து செல்லும் சாய் பல்லவியின் இந்தப் பாசம் உண்மையிலேயே அழகுதான்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *