சென்னை:
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 78-வது சீனியர், 58 -வது ஜூனியர் மற்றும் 41-வது சப் ஜூனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக ஜூனியர் மகளிர் அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
தபிதா, ஹாஷினி, ஜெய் ஜோத்ஸ்னா ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு அணி ஜூனியர் அணி ஸ்பிரிண்ட் பிரிவில் 1:6.363 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றது.
இதன்மூலம் 2021-ல் நடைபெற்ற 49-வது தேசிய ஜூனியர் போட்டியில் அந்தமான் & நிக்கோபார் அணி படைத்திருந்த 1:16.593 நிமிட சாதனையை தமிழக வீராங்கனைகள் முறியடித்தனர்.
மேலும் இந்தப் போட்டியின் ஜூனியர் ஒரு கிலோமீட்டர் ஐடிடி போட்டியில் தபிதா தங்கமும், மகளிர் ஜூனியர் ஸ்கிராட்ச் ரேஸில் கே.ஹாசினி வெள்ளியும், ஜூனியர் ஸ்பிரிண்ட் பிரிவில் ஜெய் ஜோத்ஸ்னா வெண்கலமும் வென்றனர்.