திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை:
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அங்கீகாரம், அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் பள்ளிகளிடம் 400 கோடி ரூபாய் வசூலித்து மேசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கடந்த அக்.26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரை, நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *