வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​களுக்கு ஏற்ப புதிய கண்​டு​பி​டிப்​பு​களை உரு​வாக்க மாணவர்​கள் முயல வேண்​டும்; அமைச்சர் த.சரத்குமார் அறிவுறுத்தல்!!

கூடுவாஞ்சேரி:
செங்​கல்​பட்டு மாவட்​டம், நந்​திவரம் அரசு தகைசால் பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் மாவட்ட அளவி​லான தென்​னிந்​திய அறி​வியல் கண்​காட்​சியை நேற்று அமைச்​சர் த.சரத்​குமார் தொடங்கி வைத்து மாணவர்​களின் அறி​வியல் படைப்​பு​களைப் பார்​வை​யிட்டு, அவற்​றின் செயல்​பாடுகள் மற்​றும் பயன்​பாடுகள் குறித்து கேட்​டறிந்​தார்.. ஆட்சி​யர் மு.வீரப்​பன் உடனிருந்​தார்.

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் பேசிய​தாவது: மாணவர்​கள் செல்​போன்​களை அதி​களவில் பயன்​படுத்​து​வ​தால் விளை​யாட்​டுத் திறன், அறிவியல் செய்​முறைத் திறன் குறைகிறது.

இதுபோன்ற அறி​வியல் கண்​காட்​சிகள் மாணவர்​களின் கவனத்தை அறி​வியல் சார்ந்த கற்​றலுக்கு கொண்டு செல்​லும். வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​களுக்கு ஏற்ப புதிய கண்​டு​பி​டிப்​பு​களை உரு​வாக்க மாணவர்​கள் முயல வேண்​டும்.

முந்​தைய காலங்​களில் போக்​கு​வரத்து, மின்​சா​ரம் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் இல்​லாததால் கல்வி கற்​ப​தற்கே பல சிரமங்​கள் இருந்​தன. ஆனால் இன்​றைய மாணவர்​களுக்கு ஏராளமான வாய்ப்​பு​கள் உள்​ளன.

அவற்​றைப் பயன்​படுத்தி பல்​வேறு துறைகளில் சாதிக்க வேண்​டும். இதுவே முதலமைச்​சரின் விருப்​பமாகும் என்​றார்.

இந்​தக் கண்​காட்​சி​யில் 83 அரசுப் பள்​ளி​கள், 11 அரசு உதவி​பெறும் பள்​ளி​கள் உள்​ளிட்ட மொத்​தம் 118 பள்​ளி​களைச் சேர்ந்த 525 மாணவர்​கள், 75 ஆசி​ரியர்​கள் பங்​கேற்​றனர்.

நிகழ்ச்​சி​யில் செங்​கல்​பட்டு எம்​எல்ஏ தியாக​ராஜன், மாவட்ட முதன்​மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *