கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் அஞ்சலி!!

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை கொளத்​தூர் தொகு​தி​ தவெக எம்எல்ஏ வி.எஸ்​.​பாபுவுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர் சென்னை அமைந்​தகரை நெல்​சன் மாணிக்கம் சாலை​யில் உள்ள எம்​ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனை​யில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரி​வில் அனு​ம​திக்கப்​பட்​ட அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவி​யுடன் பல்​துறை மருத்​து​வர் குழு​வினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தனது அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த வி.எஸ்.பாபுவின் உடல் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தவெகவினரும் திரளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார். அப்போது வி.எஸ்.பாபுவின் மனைவி பரிமளம் மற்றும் மகன்கள்,மகளுக்கு முதல்வர் விஜய் ஆறுதல் கூறினார்.

முன்னதாக முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை முதல்வர் விஜய்யின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *