இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, கார்த்திகை – 4 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : ஏகாதசி பின்னிரவு 3.01 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : உத்திரட்டாதி பின்னிரவு 4.12 மணி வரை பிறகு ரேவதி

யோகம் : சித்த / அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம். சுவாமிமலை ஸ்ரீ முருக பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா, வள்ளியூர் ஸ்ரீ முருக பெருமான் திருக்கல்யாணம்.

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலநாயகர் காலை வெள்ளி யானை வாகனத்திலும், அறுபத்து மூவருடன் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் கோவிலுக்குள் புறப்பாடு.

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. தூத்துக்குடி பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் – போட்டி

ரிஷபம் – செலவு

மிதுனம் – லாபம்

கடகம் – ஓய்வு

சிம்மம் – முயற்சி

கன்னி – விவேகம்

துலாம் – வரவு

விருச்சிகம் – சிந்தனை

தனுசு – வெற்றி

மகரம் – மாற்றம்

கும்பம் – நற்செயல்

மீனம் – பண்பு

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *