ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 113-வது கிரிவல தேரோட்ட திருவிழா!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சூட்டு பொத்தை மலை அடி வாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது.

ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 113-வது கிரிவல தேரோட்ட திருவிழா இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது.

பொத்தை அடிவாரத்தில் உள்ள வன விநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மேருமண்டபத்தில் உள்ள ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.

ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையையொட்டி முக்கிய நிகழ்வாக இன்று காலை 5 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலை ஞர்களின் பரதநாட்டியம், கோலாட்டங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது.

சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வந்தனர். தேரோட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் டெல்லி, பெங்களூர், கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி பக்தர்கள் பங்கேற்றனர். தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் வசந்த மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு வழிபடுகிறார்கள். நாளை காலை 8.30 மணிக்கு வசந்தமண்டபத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது.

24-ந் தேதி காலை 8.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் குருஜெயந்தியும் மாலை 5 மணிக்கு சூட்டுபொத்தை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகி பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அலுவலர்கள் செய்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *