இசையமைப்பாளர் அனிருத் தனது திருமணத்துக்கு முந்தைய கொண்டாட் டங்களின் புகைப்படங்கள்!!

சென்னை:
இசையமைப்பாளர் அனிருத் தனது திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவற்றைப் பகிர்ந்து, ‘எனக்கு பிடித்த மாயாஜாலம்’ எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அவர் பகிர்ந்துள்ள படங்களில் கொஞ்சும் காதல், கொஞ்சம் இசை, கல்யாண கலை மின்னுகின்றன. இந்த உணர்வுகளை முதல் படம் பூரணமாக வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது படத்தில் கைகோத்தபடி திருமண ஜோடி ஒய்யாரமாக நடந்து வர, இருபுறமும் இருப்பவர்கள் அவர்களை ஆராவாரத்துடன் வரவேற்கிறார்கள்.

மூன்றாவது படத்தில் இயல்பாக இசை தன்னை ஒரு அங்கமாக்கி இருக்கிறது. மின்விளக்குகள் நட்சத்திரங்களாய் ஜொலிக்க, பட்டொளி வீசும் மேடையில் அனிருத் பாடும் பாடலுடன் உடல்மொழியால் இணைந்து கொள்கிறார் காவ்யா.

அடுத்தப் படம் பெற்றோருடன். கடைசிப் படத்தில் வேலைப்பாடுடைய உடையில் இருவரும் இருக்க, அனிருத்தின் கரங்களுக்குள் தஞ்சமைடைந்திருக்கும் காவ்யா பூரிப்பில் பூத்திருக்க அவரின் விழிகளில் தன் விருப்பத்துகுரிய மாயஜாலத்தைத் தேடுகிறார் அனிருத்.

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 11 அன்று கிரீஸ் நாட்டில் சுயமரியாதை சடங்கின் அடிப்படையில் நடைபெற்றது. இதனை திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா உறுதிப்படுத்தி இருந்தார்.

வழக்கமான திருமணச் சடங்குகள் போல் இல்லாமல் சுயமரியாதை திருமணத்தில் பரஸ்பர சம்மதமும், சமத்துவமும் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் திருமண ஜோடி சாட்சிகள் முன்னிலையில் மாலையோ மோதிரமோ மாற்றிக் கொள்கிறார்கள். 1967-ம் ஆண்டு முதல் சுயமரியாதை திருமணங்களுக்கு தமிழகத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *