மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்…

மேஷம்

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் உண்டு.

ரிஷபம்

இல்லம் தேடி இனிய தகவல் வரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நெருக்கம் ஏற்படும்.

மிதுனம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். வீட்டைப் பராமரிப்பதில் ஆர்வம் கூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.

கடகம்

குதூகலம் கூடும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். எந்தச் செயலையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்மம்

எதிரிகளின் பலம் கூடும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கெடுபிடி அதிகரிக்கும்.

கன்னி

செல்வாக்கு உயரும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

துலாம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியக்கும் அளவு செயலொன்றை செய்து காட்டுவீர்கள்.

விருச்சிகம்

வளர்ச்சி கூடும் நாள். பண வரவு திருப்தி தரும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

தனுசு

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர்ப் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு.

மகரம்

தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பங்கள் கூடிவரும்.

கும்பம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.

மீனம்

கடமையைச் செவ்வனே செய்து முடிக்கும் நாள். வருமானம் உயரும். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *