இந்தியாவை சேர்ந்த கோல்டி பிரார் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 1.62 கோடி வெகுமதி அறிவித்த கனடா…

இந்தியாவை சேர்ந்த கோல்டி பிரார்,கனடாவின் மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.


இந்நிலையில் அவரைக் கைது செய்யும் வகையில் அவரை பற்றி தகவல் கொடுத்தால் 250,000 கனேடிய டாலர்கள் (சுமார் ரூ.1.62 கோடி) வரை வெகுமதி வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது.


குற்றவாளிகளை தேடும் பிஎல்ஓ திட்டத்தின் கீழ் இந்த வெகுமதி வழங்கப்படுகிறது.

கோல்டி பிராரின் உண்மையான பெயர் சதிந்தர்ஜித் சிங். 2023 செப்டம்பரில் கனடாவின் வின்னிபெக் நகரில் நடந்த ஒரு கொலைக்காக அவர் காவல்துறையால் தேடப்படுகிறார்.
காவல்துறையின் கூற்றுப்படி, 39 வயதான சுக்துல் சிங் கில், செப்டம்பர் 20, 2023 அன்று வின்னிபெக்கின் ஹேசல்டன் டிரைவ் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை வின்னிபெக் காவல்துறை, ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை மற்றும் பிற முகமைகள் இணைந்து விசாரித்தன.


கடந்த பிப்ரவரி 23 அன்று, கோல்டி பிரார் மற்றும் கரன்பீர் சிங் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.


அவர்கள் இருவர் மீதும் கொலைச் சதி மற்றும் முதல் நிலைக் கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கவின் எப்பிஐ, செப்டம்பர் 28 அன்று, மிகவும் தேடப்படும் 10 தப்பியோடிய குற்றவாளிகள் பட்டியலில் கோல்டி பிராரையும் சேர்த்தது.


அவரைக் கைது செய்யும் வகையில் அவரை பற்றி தகவல் கொடுத்தால், 1 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8.9 கோடி) வெகுமதியை எப்பிஐ அறிவித்தது.

கோல்டி பிரார், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர் என்றும், கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

மே 2022ல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் கொலை உட்பட பல வழக்குகளில் கோல்டி பிரார் இந்தியாவிலும் தேடப்பட்டு வருகிறார்.


கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் தற்போது அவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *