ஏஐ மருத்துவத்தால் மனித ஆயுள் 1,400 ஆண்​டு​கள் வரை வாழக்​கூடும் – ஆக்ஸ்போர்டு முன்னாள் பேராசிரியர் கணிப்பு!!

ஸ்டாக்ஹோம்:
ஸ்​வீடன் தத்​துவ ஞானி​யும், ஆக்ஸ்போர்​டின் முன்னாள் பேராசிரியரு​மான நிக் போஸ்ட்ரோம், மனிதர்​கள் 1,400 ஆண்​டு​கள் வரை வாழக்​கூடும் என்று தெரி​வித்​துள்​ளார்.

அண்​மை​யில் இணை​யதள நிகழ்ச்சி ஒன்​றில் பேசிய போஸ்ட்ரோம், அவர் வெளி​யிட்ட ‘சூப்​பர் இன்டெலிஜென்ஸிற்கான உகந்த நேரம்’ என்ற ஆய்​வுக் கட்டுரையில் உள்ள தகவல்​களைப் பகிர்ந்து கொண்​டார்.

அப்போது அவர், “நாம் வயதா​காமல் இருந்​திருந்​தால் நமது ஆயுட்​காலம் சுமார் 1,200, ஒரு​வேளை 1,400 ஆண்​டு​களாக இருக்​கலாம்” என தெரி​வித்​தார்.

அதே​நேரம் இது மனிதர்​களுக்கு அழிவே இல்லாத சாகாவரம் பற்​றிய கணிப்பு அல்ல என்​றும், கணித ரீதியான சாத்​தி​யக்​கூறு மட்​டுமே என்​றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

போஸ்ட்​ரோம் கூறும் 1,400 ஆண்​டு​கள் என்​பது, இது​வரை சரிபார்க்​கப்​பட்ட மிக வயதான மனிதரின் வயதை விட 11 மடங்குக்கும் அதி​க​மாகும். பதிவு செய்​யப்​பட்ட வரலாற்​றில் மிக வயதான, சரி​பார்க்​கப்​பட்ட மனித​ரான பிரெஞ்​சுப் பெண்​மணி ஜீன் கால்​மென்ட், 122 ஆண்​டு​கள் 164 நாட்​கள் வாழ்ந்து 1997-ல் காலமானார்.

விஞ்​ஞானிகளால் முதுமை எனும் உயி​ரியல் செயல்​முறையை முற்​றி​லு​மாக நீக்க முடிந்​தால், வயதாவதோடு தொடர்​புடைய கடுமை​யாக அதி​கரிக்​கும் மரண அபா​யத்தை மக்​கள் இனி எதிர்கொள்ள வேண்​டி​யிருக்​காது என்​பதே போஸ்ட்​ரோம் முன்வைக்கும் கருத்​தின் கணித ரீதி​யான அடிப்​படை​யாகும்.

அதாவது, மனித உடலில் ஏற்​படும் செல்​களின் சிதைவைச் சரிசெய்​து, வயோ​தி​கத்தை முற்​றி​லு​மாகத் தடுக்​கும் மருத்​துவ சிகிச்​சைகளை எதிர்​கால ஏஐ தொழில்​நுட்​பம் கண்​டறி​யும் என்று போஸ்ட்​ரோம் நம்​பு​கிறார்.

ஆரோக்​கிய​மான 20 வயது இளைஞருக்கு வயோ​தி​கம் அல்​லாத பிற காரணங்​களால் (விபத்துகள், தொற்​று​நோய்​கள் போன்​றவை) ஏற்​படும் ஆண்டு இறப்பு விகிதம் சுமார் 0.07 சதவீத​மாக உள்​ளது. வயோ​தி​கம் தடுக்கப்பட்டு, இந்த விகிதம் வாழ்​நாள் முழு​வதும் மாறாமல் இருந்தால், ஒரு மனிதனின் சராசரி ஆயுட்​காலம் சுமார் 1,429 ஆண்​டு​களாக இருக்​கும் (1 ÷ 0.0007) என அவர் நம்​பு​கிறார்.

மனித முது​மை​யைத் தடுக்​கக்​கூடிய நிறு​வப்​பட்ட சிகிச்சை எதுவும் இல்​லை. மேலும், அவர் கற்​பனை செய்​யும் உயிர்​மருத்​துவ மாற்​றத்தை தற்​போதைய ஏஐ அமைப்​பு​களால்​ வழங்​க முடி​யும்​ என்​ப​தற்​கு எந்​த ஆதா​ர​மும்​ இல்​லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *