பூனையுடன் அஜித் க்யூட் கொஞ்சல் பேச்சு..!

சென்னை:
நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார்.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கார் ரேஸில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அஜித், Formula Maruti Indian Championships மற்றும் Formula BMW Asia Championship போன்ற பந்தயங்களில் பங்கேற்றார்.
2003-ல், அவர் MRF Racing Series-ல் பங்கேற்று, தனது முதல் பந்தய அனுபவத்தைப் பெற்றார்.

2010-ல், அஜித் குமார் FIA Formula Two Championship பந்தயத்தில் பங்கேற்றார். சர்வதேச அளவிலான கார் பந்தயத் தொடரான இதில், அவர் பல ஐரோப்பிய பந்தயங்களில் போட்டியிட்டார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

இதற்கிடையே, குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரின் 64வது (AK64) படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
இந்நிலையில், அஜித்குமார் சமீபத்தில் பூனையை கொஞ்சும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பூனையிடம்,” நீ என்னுடன் சென்னைக்கு வா.. சென்னைக்கு கூட்டிட்டு போறேன். வரியா பேபி..” என்று அஜித் பேசியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *